பப்பட பக்கெட் மற்றும் 3 முகக்கவசங்களை உள்ளடக்கிய விசேட பொதி! 1998க்கு அழையுங்கள் என்கிறார் பந்துல

1998 ரூபா விலையில் சதொச வழங்கும் விசேட கிறிஸ்மஸ் நிவாரணப் பொதியை கொள்வனவு செய்ய விரும்பும் எந்தவொரு நுகர்வோரும் 1998 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் அதனை வீட்டிற்கு விநியோகிக்க முடியும் என வர்த்தக அமைச்சரான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி அண்மையில் ஊடக சந்திப்பின் அறிமுகம் செய்யப்பட்டது.

1998 சலுகை விலையில் வழங்கப்படும் நிவாரணப் பொதியின் உண்மையான மதிப்பு ரூ.2,489 என அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

இந்த நிவாரணப் பொதியில் 10 கிலோ சுப்பிரி சம்பா அரிசி, 2 கிலோ சீனி , 200 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட நெத்தலி கருவாடு , 400 கிராம் நூடுல்ஸ் பக்கெட், 100 கிராம் தேயிலை பக்கெட், 400 கிராம் உப்பு, ஒரு குளியல் சவர்க்காரம் , ஒரு சலவை சவர்க்காரம் உள்ளிட்ட 20 பொருட்கள் இதில் உள்ளன.

மேலும் இவ்விசேட பொதியில் பப்படம் பக்கெட் மற்றும் 3 முகக்கவசங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இப்பொதியை வீட்டிற்கே விநியோகிக்க விநியோக கட்டணமாக 150 ரூபா பெற்றுக் கொள்ளப்படுகிறது.

48 மணி நேரத்திற்குள் விநியோகம் செய்யப்படும். சதொச இன்று முதல் இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *