அண்ணாவினால் முன்னெடுக்கப்பட்ட மூர்க்கத்தனமான தாக்குதலில் தம்பியொருவர் உயிரிழந்த சம்பவம் பொல்வத்த பகுதியில் பதிவாகியுள்ளது.
மாத்தளை -பல்லேபொல, பொல்வத்த பிரதேசத்தில் இன்று (20) சகோதரர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு வலுவடைந்தததில், சகோதரர்களில் தாக்குதலில் தம்பி உயிரிழந்துள்ளதாக ஹெவெல பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.
செலகம – பொல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த சனத் ஜயசிங்க என்றழைக்கப்படுமு் 27 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளாா்.
இந்த தாக்குதலை மேற்கொண்ட நபரின் இல்லத்தில் (உயிரிழந்தவரின் அண்ணனின் வீடு) சில நாட்களுக்கு முன்னா் இருவருக்கும் இடையில் முரண்பாட்டு நிலை இருந்து வந்துள்ளதாக பொலிஸாாின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பொல்வத்த பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.