எரிபொருளுக்கு கூப்பன் முறையைக் கொண்டு வருவோம் என்று அமைச்சர் ஒருவர் கூறுகின்றார் , எம்மை மீண்டும் பழைய நிலைக்கு தள்ள தான் அரசு முனைகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஹேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் மக்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்திக்கொண்டு, தாம் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்
பாராளுமன்ற உறுப்பினராக உள்ளனர் நிதியமைச்சர் , அனைத்து சுக போக வசதிகளுடனும் வாழ்கின்றனர்.அவை அனைத்தும் சாதரண மக்களுடைய பணம்.
உரம் இல்லை, எரிவாயு வெடிப்பு பிரச்சினை,எரிபொருள் பிரச்சினை ஆகிய பிரச்சினைகள் காணப்படுகிறது. இதற்கான எந்த தீர்வையும் அரசு மேற்கொள்ளவில்லை.
புதிய வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,குறிப்பாக ஆபிரிக்க நாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகளின் வருகை தடை விதிக்க வேண்டும்.
ஆனால் நம் நாட்டில் மட்டும்தான் எவ் வித தடையும் இன்றி எல்லோரும் வந்து செல்கின்றனர்.
நாட்டில் ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்த்தி தருகிறோம் என்று கூறி பாடசாலையிற்கு ஆசிரியர்களை வரவழைத்தனர்.ஆனால் எவ் வித மாற்றமும் இல்லை.
அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளினாலேயே உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது என்றும் இதுவே மரக்கறி மற்றும் அரிசியின் விலை அதிகரிப்புக்கு காரணம் என்றும் மேலும் அவர் குற்றம் சாட்டினார்.
இவ்வாறான நெருக்கடி நிலையின் போது அரசாங்கத்தின் உறுப்பினர்கள் எவ்வாறு வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொள்கின்றனர்.
நாட்டின் தற்போதைய நிலைமையை ஏன் தற்போதைய அரசாங்கத்தினால் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் மேலும் அவர் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.