திருகோணமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
திருஞானசம்பந்தர் வீதியை சேர்ந்த 70 வயதுடைய வீரசிங்கம் இந்திரராஜ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
சந்தியை கடக்க இருந்த இரு சக்கர வாகனத்தின் ஓட்டுநரின் மீது வேகமாக வந்த முச்சக்கர வண்டி மோதியதில் இந்த மரணம் இடம்பெற்றதாக தலைமையகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி ஓட்டுநரை கைது செய்து திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.