நாட்டில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு கூப்பன் முறைமையில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதனால் மக்களும் பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வசதி குறைந்த மக்களுக்கு கூப்பன் முறை அறிமுகம் செய்வது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கும் இவ்வாறு கூப்பன் முறைமை அறிமுகம் செய்வது பொருத்தமாக அமையும்.
இதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டை வரையறுத்துக்கொள்ள முடியும் என மேலும் தெரிவித்துள்ளர்.
கணவன்மார்களின் துன்புறுத்தலால் கொழும்பில் இவ்வருடம் 20 பெண்கள் உயிரிழப்பு!