மன்னார் பிரதேச சபையின் 2022 ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட அமர்வின்போது ஏற்பட்ட கலவரத்தில் பெண் பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு தொடர்பான கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
ஏற்கனவே, மன்னார் பிரதேச சபையில் எம்.எச்.எம் முஜாஹீரா, அல்லது உப தவிசாளராக இருந்த முகமட் இஸ்ஸகுதீனா, தவிசாளர் என்ற பாரிய இழுபறி நிலைமை காணப்பட்டது.
இதன்போது, ஏற்பட்ட வாய்த் தர்க்கங்கள் கலவரமாக மாறியதால், பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரை ஒலிவாங்கியால் தாக்க முற்பட்ட வேளை, குறித்த நபர் பெண் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான பெண் உறுப்பினர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட உறுப்பினரிடம் பேசாலை பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
மன்னார் பிரதேச சபையின் 42, 43 ஆவது இரு சபை அமர்வுகளில் சபையின் தவிசாளர் யாரென்ற சந்தேகம் எழுந்ததால் அமர்வுகளில் இருந்து எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு!