நாட்டில் உள்ள பாடசாலைகளில் பல்வேறு வகையான கட்டணங்கள் அறவிடப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா காரணமாக பாடசாலைகள் நடைபெறாது இருந்தது, பலருக்கு வேலை இன்மை பிரச்சினை காணப்படுகிறது. இந்த நிலையில் கட்டணங்கள் அறவிடுவது தவறானதாகும்.
2,500 ரூபா முதல் 15,000 வரை கட்டணம் அறவிடப்படுகின்றது. இது பெரிய சுமையாக பெற்றோரிற்கு உள்ளது. இதற்கு கல்வி அமைச்சு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும்.
அத்துடன் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு இன்னும் வழங்கப்படவில்லை. ஜனவரி மாதம் சம்பளம் அதிகரிக்கப்படும் என தெரிவித்திருந்தனர். இந்த விடயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சீன உரக் கப்பலுக்கு நட்டஈடு வழங்கப்படாவிட்டால் நாட்டுக்கு இழப்பு! ஜோன்ஸ்டன்