நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள பால் மா தட்டுப்பாட்டின் காரணமாக பொது மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
நாட்டில் பல இடங்களில் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பெரும்பாலான வர்த்தக நிலையங்களில் பால்மா விற்பனைக்கு இல்லையென நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
தற்போதுள்ள பால் மா நெருக்கடி காரணமாக இன்று காலை நுகேகொடையில் உள்ள கடைகளுக்கு முன்னால் பால் மா கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்துள்ளனர்.
மேலும், பால் மாவினை கொள்வனவு செய்வதற்காக அதிகாலையில் இருந்து வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும், ஏனைய வேலைகளை புறம்தள்ளிவிட்டு பால் மா கொள்வனவிற்காக அதிக நேரத்தை செலவிட வேண்டியுள்ளதாகவும் நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.
வடகிழக்கில் சீனாவின் ஆதிக்கத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும்! இரா.துரைரெட்ணம்