
மூத்த சட்டத்தரணி கனகரட்ணம் கேசவன் நேற்று 74ஆவது வயதில் காலமானார்.
கொரோனாத் தொற்றுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவானாக நீண்டகாலம் கடமையாற்றிய இவர், யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராகவும் பதவி வகித்திருந்தார்.
இவரது மறைவு தமிழ் பேசும் சட்டத்துறை சார்ந்தவர்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.