நேற்று (20) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருளின் விலையை அதிகரிக்க பெற்றோலிய கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரி லீற்றர் பெற்றோலின் விலையை 20 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 177 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகின்றது.
அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலையை 23 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதுடன், புதிய விலையாக 207 ரூபா நிர்ணயிக்கப்படுகின்றது.
ஒரு லீட்டர் டீசலின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு லீட்டர் டீசலின் புதிய விலை 121 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகின்றது.
ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படுவதுடன், புதிய விலையாக 159 ரூபா நிர்ணயிக்கப்படுகின்றது.
ஒரு லீட்டர் மண்ணெண்ணையின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதுடன், புதிய விலையாக 87 ரூபா நிர்ணயிக்கப்படுகின்றது.