பதுளை – களன் தோட்டத்தைச் சேர்ந்த 18 வயதான யுவதி ஒருவல் காணாமல் போயுள்ளார்.
மேலதிக வகுப்புக்கு செல்வதாக தெரிவித்து நேற்றைய தினம் வீட்டிலிருந்து சென்ற குறித்த யுவதி இதுவரை வீடு திரும்பாத காரணத்தினால் அவரது தாயாரினால் கஹட்டருப்ப பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பதுளை கோபோ பகுதியில் உள்ள நீர்நிலை ஒன்றிற்கு அருகில் குறித்த யுவதி எடுத்துச் சென்ற புத்தகப்பை, கையடக்கத் தொலைபேசி மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன மீட்கப்பட்டுள்ளதாக கஹட்டருப்ப பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் குறித்த தொலைபேசியின் சிம் அட்டை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை கஹட்டருப்ப பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.