மரக்கறிகளின் தேவை அதிகரிப்பு… விலைவாசி மேலும் அதிகரிக்க வாய்ப்பு

பண்டிகைக் காலங்களில் அதிகரித்து வரும் மரக்கறிகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்பதனால் விலைவாசி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மொத்த வியாபாரிகள் அதிக விலை கொடுத்து விவசாயிகளிடம் இருந்து நேரடியாக காய்கறிகளை கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

கரட் விலை 320 முதல் 480 வரையிலும், கோவா 230 முதல் 250 வரையிலும், வெண்டிக்காய் சுமார் 260 வரையிலும், பீட்ரூட் 370 வரையிலும், 370 வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக கூறினார்.

மேலும் தக்காளி விலை சுமார் 270 வரைக்கும் குடை மிளகாய் சுமார் 700 வரையிலும், பீன்ஸ் சுமார் 370 வரையிலும், பச்சை மிளகாய் சுமார் 800 வரையிலும் விற்பனையாவதாக கூறினார்.

இதேவேளை பண்டிகை காலம் என்பதனால் சில மரக்கறிகள் சந்தைக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *