24 மணி நேரத்தில் வடக்கு கடலில் 69 தமிழக மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் – எழுவைதீவு அருகே நேற்று (திங்கட்கிழமை) மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களையும் அவர்களிடம் இருந்து 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் யாழ்ப்பாண கடற்றொழில் நீரியல்வள துறை அதிகாரிகள் ஊடாக இந்திய மீனவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை நேற்று முன்தினம் 43 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டுதோடு மன்னார் கடற்பகுதியில் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவோடு நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *