இலங்கையில் டெங்கு அபாயமிக்க பிரதேசங்களாக 10 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு பரவல் தொடர்பாக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தேசிய டெங்கு ஒழிப்பு பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Advertisement
ஜனவரி மாதம் முதல் இன்றுவரையிலான காலப்பகுதியில் 10,030 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கண்டி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளது.