மருத்துவபீட பட்டமளிப்பில் 13 தங்கப்பதக்கங்களை வென்ற மாணவியின் வீட்டுக்கு சென்று பாராட்டிய கூட்டமைப்பு!

கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பின் போது, மருத்துவபீடத்தில் பயின்ற கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்றை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று 13 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்திருந்தார்.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவின்போது வழங்கப்படும் 37 தங்கப்பதக்கங்களில் சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உள்ளடங்களாக 13 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியிருந்தார்.

சமூக வலைத்தளங்களில் அவரை பலரும் பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில், இன்று அவரது வீட்டிற்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு குழுவினர், தர்ஷிகாவை பாராட்டி கௌரவப்படுத்தினர்.

இதில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், மற்றும் காரைதீவு தவிசாளர் கி.ஜெயசிறில். இலங்கை தமிழரசு வாலிபர் முன்னனி துணைச் செயலாளர் நிதான்சன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அமைதிக்கான நோபல் பரிசைவென்ற தென்னாபிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *