நல்லூர் பிரதேச செயலகத்தில் உதவித்திட்டங்களை வழங்கி வைத்த சிறீதரன் எம்பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின், பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் உபகரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நல்லூர் பிரதேச செயலகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
அதன்படி, 2021 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் ஜே/94 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த பாரதிமன்ற சனசமூக நிலையத்திற்கு 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான தளபாடங்களும்,

ஜே/101 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த நண்பர்கள் விளையாட்டுக் கழகத்திற்கும் ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழகத்திற்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினருடன் நல்லூர் பிரதேச செயலாளர் எழிலரசி அன்ரன் யோகநாயகம், பிரதேச செயலகத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் பிருந்தினி ஜெயந்தன் நிர்வாக உத்தியோகத்தர் கே.வி தனபாலா, நாடாளுமன்ற உறுப்பினரின் நல்லூர் பிரதேச இணைப்பாளர் பிரபாகரன் துஷ்யந்தன் மற்றும் கிராம அலுவலர் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *