வவுனியா மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்!

வவுனியாவில் உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நாளை (28-12-2021) ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வவுனியாவில் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும். வவுனியா பிரதேசத்தில் மரக்காரம்பளை கணேசபுரம், சமயபுரம், ஈச்சங்குளம், கல்லறை.

மற்றும், ஈஸ்வரிபுரம், கல்மடு கரு வேப்பங்குளம், கற்குளம் (சாஸ்திரிகூழாங்குளம்), கிடாச்சூரி, கோதாண்டர் நொச்சிக்குளம், மறவங்குளம், பூம்புகார், தரணிக்குளம், இரணையிலுப்பைக்குளம், ஹபீப் நகரம், காக்கையங்குளம், கங்காணிகுளம், கீரி சுட்டான், கோவில்புளியங்குளம் (மடு), மதீனாநகர், முள்ளிக்குளம் திட்டம். பரசங்குளம் (மடு துணுக்காய் வீதி), சின்ன வலயங்கட்டு, விளாத்திக்குளம் (எம்.என்) ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *