“ஜனாதிபதியின் கருத்துக்களை சுற்றறிக்கைகளாக ஏற்றுக் கொண்டதன் விளைவே பின்னடைவுக்கு காரணம்””

அரசாங்கம் தற்போது தமது தவறுகளை அதிகாரிகளின் மீது சுமத்தி தப்பித்துக்கொள்ள முனைகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், ஜனாதிபதியின் கருத்துக்களை சுற்றறிக்கைகளாக ஏற்று கொண்டதன் விளைவே பின்னடைவுக்கு காரணம் என கூறினார்.

குறிப்பாக இரசாயன உரத்திற்கு பதிலாக இயற்கை உரங்களை அமுல்படுத்துவதற்கு விவசாய அமைச்சு ஆதரவை வழங்கவில்லை என்றும் கயந்த கருணாதிலக்க சுட்டிக்காட்டினார்.

மேலும் இலங்கையில் அமெரிக்க டொலர் நெருக்கடி ஏற்படுவதற்கு அரசாங்கத்தின் பலவீனமான நிதி முகாமைத்துவமே காரணம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எரிபொருள் விலையை குறைப்பதை தவிர்க்க அரசாங்கம் இந்த பிரச்சினையை ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்துவதாக கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டார்.

இதற்கிடையில் பிரதேச சபை மற்றும் மாகாண சபை தேர்தல்களை பிற்போடுவதற்கான செயற்பாடுகளையே அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *