டெங்கு நோய்க்கு உள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! விசேட வைத்தியர் தீபால் எச்சரிக்கை

ஒரு வாரத்துக்குள், டெங்கு நோய்க்குள்ளான 50 சிறுவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக, கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் குழந்தை நல விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

டிசெம்பர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 624 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

எனவே, சிறுவர்கள் டெங்கு நோய்க்கு உள்ளாகுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பெற்றோர் முன்னெடுக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களின் எண்ணிக்கை 10 ஆகக் குறைவடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை நாட்டில் ஏற்பட்ட போது, நாளொன்றுக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்திருந்தது.

நேற்றுமுன்தினம் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட சிறுவர்களில் சுமார் 200 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் அடையாளங்காணப்படவில்லை.

நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டமைக்கு தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டமையே காரணம்.

சிலர் தடுப்பூசி செலுத்துக் கொள்வதிலிருந்து விலகியுள்ளனர். இவர்கள் மிக வேகமாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகலாம்.

எனவே, இவ்வாறானவர்களை இனங்காணப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மதுரங்குளி ரயில் கடவை சமிஞ்சை விளக்குகள் பழுது: அச்சத்தில் பயணிக்கும் மக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *