3.1 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு ஒதுக்கீடு இருப்பதாக இன்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரான அஜித் நிவார்ட் கப்ரால் அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த வாரம் இலங்கையின் கையிருப்பு 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டதுடன், 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே செலவுக்காகவும் மீதி தங்கம் கையிருப்பில் உள்ளதாகவும் அஜித் நிவார்ட் கப்ரால் அறிவித்ததாக, பாராளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார ஜயமஹ தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
3.1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்குப் பதிலாக தங்கம், சீன யுவான் அல்லது பிற நாணயங்கள் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிதியை கடனை திருப்பி செலுத்துவதற்கு பயன்படுத்த முடியுமா என்றும் மேலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.






