மருத்துவர்கள் என்ற ரீதியில் இம்முறை பெரிய ஏமாற்றம் கிடைத்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புகையிரத சேவையாளர்களின் போராட்டம் மற்றும் வைத்தியர்களின் போராட்டம் ஆகியன , மக்களுக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாத வகையில் மேற் கொள்ளப்பட்டது.
மக்கள் இலவசமாக புகையிரதத்தில் பயணித்தனர்.
அத்துடன் இம்முறை வைத்தியர்களின் விருப்பமின்றி இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாம் போராடினாலும் 80 வீதமானவர்கள் பணியில் ஈடுபட்டார்கள்.
கடந்த 5 வருட காலங்களில் அதிக பணிச் சுமையில் மருத்துவர்கள் உள்ளனர்.
ஆனால் ஊடகங்களில் காட்டுவது வைத்தியர்களில் வேலை செய்யவில்லை என்று.
எமது பிரச்சினைகள் தொடர்பில், புதிய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.






