முப்படைகளின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா நேற்றைய தினம் வடக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகங்களுக்கு இன்று பகல் உலங்குவானூர்தியில் சென்ற அவர் இராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இராணுவத்தினர், கடற்படை, விமானப்படையினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த இராணுவத்தளபதி சமகால நிலைமைகள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.