<!–
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
விநாயகபுரம் 3 பிரிவு பாலைக்குடா பாடசாலை வீதியிலுள்ள குறித்த வீட்டில் சம்பவதினமான இன்று பகல் உணவு தயாரித்துக் கொண்டிருந்தபோது காஸ் அடுப்பு திடீரென வெடித்து சிதறியது. இருந்தபோதும் எவருக்கும் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பாஸ்கரநாதன் புவிதரன் முறைப்பாடு செய்துள்ளதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.