திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்ரீதுவ பிரதேசத்தில் மான் ஒன்றினை காயப்படுத்தியதாக ஆண், பெண் ஒருவரையும் சேருநுவர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, மூதூர் நீதிவான் நீதிமன்றில் குறித்த சந்தேக நபர்களை இன்று ஆஜர்படுத்திய போது, இருவரும் குற்றவாளிகள் எனக் கருதி நீதிவானால் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் ஒருவருக்கு 45,000 ரூபாவும், மற்றையவருக்கு 30,000 ரூபாவும் தண்டப்பணமாக நீதிவான் தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், காயமடைந்த மானை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.