நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தற்காலிகமானது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னிலையில் பல விடயங்கள் தற்போது ஆராயப்படுள்ளன.
உலக நாடுகள், இக்கட்டான சூழ்நிலையில் இருந்த போதும் நாம் பல சிறப்பான தீர்மானங்களை எடுத்துள்ளோம்.
ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் ஆசிரியர்களுக்கு இந்த மாதம் முதல் 5000 ரூபா அதிகரிப்பு ஏற்படவுள்ளது.
கொரோனா காலத்திலும் நாம் சம்பளங்களை வழங்கியுள்ளோம்.
சமுர்த்தி உள்ளவர்களிற்கு 3500 ரூபா வழங்கப்பட்டுள்ளது. அவை உயர்த்தவும் பேசப்பட்டுள்ளது.
மருந்துகளிற்கான வரிகள் நீக்கப்பட உள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்தும் நாளை முதல் அமைச்சு ஊடாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.