யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடத்தும் வாராந்தச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் எதிர்வரும் 07.01.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில், ஆலயப் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினைத் தொடர்ந்து, தலைமையுரையினை ஆலயத்தின் தலைவர் திரு த. சோதிலிங்கம் ஆற்றுவார்.
சிறப்புச்சொற்பொழிவினை சைவசித்தாந்தபண்டிதர் சைவப்புலவர் கந்த சத்தியதாசன் ‘பேரானந்தம் பாடுதுங்காண் அம்மானா’ என்னும் விடயப்பொருளில் சிறப்புச்சொற்பொழிவு ஆற்றவுள்ளார்.