
புதுவருடத் தினத்தன்று பரந்தனில் இடம்பெற்ற கொலைச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், கிளிநொச்சி பிரதேச சபையில் சுகாதார ஊழியராகப் பணிபுரியும் இளைஞர் ஒருவர் கிளிநொச்சிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவத்தின்போது காயமடைந்தவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், கொலையுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் பிரதான சந்தேக நபர்களை பொலிஸார் இதுவரை கைதுசெய்யவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
கடந்த புதுவருட தினத்தன்று பரந்தன் சிவபுரத்தைச் சேர்ந்த குணம் கார்த்திக் (வயது -26) என்பவர் ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தார் என்பதோடு, இன்னொருவர் காயமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.