
”ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதி செயலணி தற்போது ஊவா மாகாணத்தை மையமாக வைத்து மக்கள் கருத்து கேட்போர் கூட்டத்தை நடத்தி வருகிறது
அதன் அடிப்படையில் மஹியங்கனை ஆதிவாசி கிராமத்தில் நேற்று ஆதிவாசிகளின் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளது.
ஒரே நாடு, ஒரே சட்டத்தை நிறுவும் பலம் ஜனாதிபதிக்கு உண்டு என்றும், எத்தகைய தடைகள் வந்தாலும் இந்தப் பணியை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக ,இறைவன் ஞானசார தேரரை ஆசிர்வதிப்பார் என்றும் வேதாந்த தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சந்திபில் ”ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர், உறுப்பினர்களான பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்க, சிரேஷ்ட விரிவுரையாளர் சுமேதா வீரவர்தன, சட்டத்தரணிகள் சஞ்சய மரம்பே, எரந்த நவரத்ன, செயலாளர் பானி. செனநாயக்கா உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.