‘இக்கட்டான காலங்களில்’ இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா உறுதி!

‘கடினமான காலங்களில்’ சமாளிக்க இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சருடனான தொலைப்பேசி உரையாடலின்போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளதாக அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவும் வகையில் கடன் உதவிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்டபோது, இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி, இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு இலங்கையின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இது இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரிக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியா எப்பொழுதும் இலங்கை மக்களுக்கு ஆதரவாக நிற்கும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி தெரிவித்தார்.

அத்தோடு கடந்த மாதம் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சிய இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்கக் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் பாக்சி கூறினார்.

எனது பதவிக் காலத்தில் நான் எந்தக் கடன்களையும் பெறவில்லை! ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *