திருமலையில் தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகள் உத்தியோகபூர்வமாக கையளிப்பு

திருகோணமலையில் தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “சுபீட்சத்தின் நோக்கு” வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெறுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில், திருகோணமலை மஹாதிவுல்வெவ சிங்கள தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

தேசிய பாடசாலைகள் எண்ணிக்கையை ஆயிரம் வரையில் அதிகரிக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் 71 பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் 19 பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கபில நுவன் அத்துக்கோரல , திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாடிகோரால மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் , கிழக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரியவதி கலப்பத்தி, பிரதேச சபை தவிசாளர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வடக்கு மீனவர்களுக்கு ஆதரவாக மாதகலில் ஜேவிபி கவனயீர்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *