
மூதூர் – ஷாபிநகர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஷாபிநகர் – மடுவம் வீதியில் இன்று சனிக்கிழமை காலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஷாபி நகர் பகுதியில் உள்ள மாடு அறுக்கும் மடுவத்திலிருந்து துர்நாற்றம் வீசுவதால் குடியிருப்போரும் வீதியால் செல்பவர்களும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும், தமது பகுதியில் உள்ள மாடுகள் திருடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்படுவதாக தெரிவித்தும் இதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வழியுறுத்தியும் மக்கள் மடுவம் வீதியில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட இடத்திற்கு மூதூர் பொலிஸார் வருகை தந்தனர்.
அத்தோடு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களோடு கலந்துரையாடியதோடு பிரதேச மக்கள் ஐவரை அழைத்து பிரதேச சபை தவிசாளர், சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்டோரோடு பேசி பிரச்சினையை சுமுகமாக தீர்ப்பதாக தெரிவித்ததையடுத்து எதிர்ப்பில் ஈடுபட்டோர் கழைந்து சென்றனர்.


