
12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.
அதற்கமைவாக வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.
சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பொன்னுத்துரை ஜெசிதரன் மற்றும் பாடசாலையின் அதிபர் ஆனந்தராசா ஆகியோரது கண்காணிப்பில், தடுப்பூசி ஏற்றப்பட்டது.(ஒ,4-27)