
தற்போது நிலவும் மின்சார நெருக்கடியை கருத்தில் கொண்டு மின்சார அடுப்புகளைப் பயன்படுத்தி சமைப்போர் மாலை 6 மணிக்கு முன்னதாக உணவைத் தயாரிக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
மின்சாரசபை பொது முகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க தெரிவித்தார்.
சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், அடுத்த சில நாட்களிலும் அவ்வப்போது மின்சாரம் தடைப்படலாம்.
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் ஜெனரேட்டரில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை நாட்டின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது- என்றார்.