
முல்லைத்தீவு-முள்ளியவளை-பூதன்வயல் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறு சடலமாக அடையாளம் கணப்பட்டவர் 39 வயதுடைய லோகராசா-ராஜினி என தெரியவந்துள்ளது.
குறித்த பெண் நான்கு நாட்களுக்கு முன்னதாக காணாமல் போயிருந்ததாக குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் மதவள சிங்கன்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட பூதன் வயல் பகுதியில் ஆட்களற்ற தென்னந்தோட்ட காணி கிணறு ஒன்றில் சடலமாக இன்று சனிக்கிழமை காலை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் தெரிவித்தனர்.