வவுனியாவுக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பல்வேறு உதவித் திட்டங்களை வழங்கினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் “மூச்சு” நிகழ்ச்சித் திட்டத்துக்கு அமைய ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் சஜித் பிரேமதாசாவின் எண்ணக்கருவில் நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வவுனியா மருத்துவமனைக்கு 23 லட்சம் ரூபா பெறுமதியான குருதிச் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றை வழங்கினார், அதன்பின்னர் மருத்துவமனையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட அலுவலகத்தைத் திறந்தார். அதன்பின்னர் மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்தில் 8 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சிமார்ட் வகுப்பறையைத் திறந்தார். அதன்பின்னர் வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற மும்மத வழிபாடுகளில் கலந்துகொண்டார்.