
இலங்கை திரைப்பட நடிகரும் இயக்குநருமான ரொபின் பெர்னாண்டோ தனது 84ஆவது வயதில் இன்று (08) காலமானார்.
1965 ஆம் ஆண்டு “சண்டியா” திரைப்படத்தில் இலங்கை திரைப்படத் துறைக்கு அறிமுகமானது முதல் 80க்கும் மேற்பட்ட சிங்கள படங்களில் இவர் நடித்துள்ளார்.
1983 இல், வெளியான “சூர தூத்தியோவ” திரைப்படத்தின் மூலம் ரொபின் பெர்னாண்டோ இயக்குநராகத் தடம் பதித்தார்.
இந்தத் திரைப்படம் நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
ரொபின் பெர்னாண்டோவின் இயக்கத்தில் “நிஞ்ஜா ஸ்ரீலங்கா” என்ற திரைப்படம் இறுதியாக வெளிவந்தது.
அத்தோடு இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.