
கம்பஹா கட்டுவ நீர்கொழும்பு பிரதேசத்தில், ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த விடுதி நேற்று (7) சுற்றி வளைக்கப்பட்டுள்ளதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விபச்சார விடுதியை நிர்வகித்து வந்த நபரும் பெண்ணொருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அம்லாங்கொட – வென்னப்புவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 32, 22 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.