
கொழும்பு – கல்கிஸை – சொய்சாபுர பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நேற்று (7) ஏற்பட்ட தீ விபத்து காரணமாக எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரொருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
மொரட்டுவை சொய்சாபுர பிரதேசத்தை சேர்ந்த 19 வயது இளைஞரே இவ்வாறு மரணமடைந்தார்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் புதிதாக 150 மதுபான விற்பனை நிலையங்களுக்கு அனுமதி!