
நுவரெலியாவில் உள்ள கடையொன்றில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சாக்லேட்களின் விலையில் மோசடி செய்த வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வியாபாரி தனது கடையிலிருந்த வெளிநாட்டு சாக்லேட்களில் ஒட்டப்பட்டிருந்த நிர்ணய விலையை அழித்துவிட்டு புதிய விலையை எழுதி மாற்றி எழுதியுள்ளார்.
இதனைக் கண்டுபிடித்த நுவரெலியா நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் இவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள குறித்த வியாபாரியை 13 ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்தோடு விலை மாற்றம் செய்யப்பட்ட சாக்லேட்களையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.


