
கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெற்ற பெண்கள் வழக்கத்தை விடக் கிட்டத்தட்ட 19 மணிநேர நீண்ட மாதவிடாய் சுழற்சியை சந்தித்ததாக புதிய ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.
Oregon Health and Science University விஞ்ஞானிகள் தலைமையிலான குழு, கருவுறுதல் கண்காணிப்பு செயலி மூலம் தடுப்பூசி போட்டுக்கொண்ட மற்றும் போட்டுக்கொள்ளாத 4,000 பெண்களின் மாதவிடாய் சுழற்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் இது தெரியவந்துள்ளது.
Obstetrics & Genecology என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி, கொவிட் தடுப்பூசி டோஸை எடுத்துக்கொண்ட ஆயிரக்கணக்கான பெண்கள் தமது மாதவிடாய் சுழற்சியில் ஒழுங்கற்ற மாற்றங்களைச் சந்தித்தாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
முதல் தடுப்பூசி டோஸை எடுத்துக்கொண்ட பெண்களின் மாதவிடாய் சுழற்சியின் சராசரி அதிகரிப்பு 15 மணிநேரமாக இருந்ததாகவும் 2வது டோஸுக்குப் பிறகு இது 18 மணிநேரமாக அதிகரித்ததாகவும் ஆய்வு தெரிவிக்கின்றது.
பெண்களின் மாதவிடாய் சுழற்சிகள் பொதுவாக 28 நாட்கள் நீடித்த போதிலும் இது ஒரு பெண்ணிலிருந்து மற்றொருவருக்கு மாறுபடும், அதே போல் ஒருவரின் வயது மற்றும் மன அழுத்தத்தின் காரணமாகவும் இது மாறலாம்.