முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு முள்ளியவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூதன்வயல் கிராமத்திலுள்ள தென்னங்காணியில் உள்ள கிணறொன்றிலிருந்தே இன்று 0-8ஆம் திகதி இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதேபகுதியில் வசித்து வந்த இருபிள்ளைகளின் தாயான யோகராசா ராஜினி (வயது–39) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 4ஆம் திகதியில் இருந்து குறித்த பெண்ணை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்த நிலையில் இன்று கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கணவரைப் பிரிந்து பிறிதொரு ஆணுடன் தற்காலிக சிறுகொட்டிலில் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார் எனவும் இவர்களுக்கு பூதன்வயல் கிராம அலுவலர் பிரிவில் பதிவு இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த பெண்ணின் கைப்பை ஒன்று குறித்த தென்னங்காணிக்குள் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து சடலம் கிணற்றினுள் இருப்பது பிரதேச மக்களால் இனம்காணப்பட்டு கிராம ஆலுவலருக்கு சடலம் இனம்காணப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணுடன் வாழ்ந்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த நபரை முள்ளியவளைப் பொலிஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.