எகிப்தில் கடும் பனிமூட்டம் காரணமாக சாலை தெளிவாக தெரியாததால் பேருந்து ஒன்று மினி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியதில் பயணிகள் 16 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வடகிழக்கு எகிப்தில் உள்ள சினாய் தீபகற்பத்தில், பன்னாட்டு நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
எகிப்தில் சாலைகள் கடந்த 2020-ம் ஆண்டு சாலை விபத்துகளில் சிக்கி 7 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன