
மூதூர் – 64ஆம் கட்டை மலையடி பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலைக்கு மேல் புத்தர் சிலையொன்று இனந்தெரியாதோரால் வைக்கப்பட்டு, அவ் சிலையை அகற்றக்கோரி கடந்த மாதம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு மூதூர் பிரதேச இந்துகுருமார்கள், மலையகப் பகுதியைச் சேர்ந்த இந்துகுருமார் அமைப்பினர் மற்றும் சமய நலன்விரும்பிகள் இன்று சனிக்கிழமை சென்று நிலமைகளை பார்வையிட்டனர்.
குறித்த பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் கடந்த 30ஆம் திகதி சிலர் பெரிய பாரம் கட்களை போட்டு அவ்விடத்தை அசிங்கப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த பாரம் கற்களை உடனே அகற்றாவிட்டால் போராட்டம் வெடிக்கும் என மூதூர் பிரதேச இந்துகுருமார் சங்கத்தினர் இன்றைய தினம் சத்தமிட்டதையடுத்து உடனடியாக அவ்விடத்திலிருந்த பாரம் கற்கள் அகற்றப்பட்டிருந்தன.
இதனால் பிரச்சினை சுமுக நிலைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. அத்தோடு 64 ஆம் கட்டை மலையடிப் பிள்ளையார் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றதோடு சிரமதானப் பணியும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, மூதூர், மலையக இந்துகுருமார்கள், மூதூர் பிரதேச அறநெறிப் பாடசாலைகளின் ஆசிரியைகள், சமய சமூக நலன் விரும்பிகளும், மூதூர் – 64 ஆம் கட்டை மலையடி பிள்ளையார் ஆலயத்தில் இன்றையதினம் பிரசன்னமாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


நாட்டில் ஊடகவியலாளர்களுக்கு பல அச்சுறுத்தல்கள் உள்ளது! சாணக்கியன்