ஜய ஸ்ரீமஹா போதியில் ஆசி பெற்றார் ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க ஜய ஸ்ரீமஹா போதியை வழிபட்டு, ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

புண்ணிய ஸ்தலத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அட்டமஸ்தானாதிபதி கலாநிதி வணக்கத்துக்குரிய பல்லேகம சிறிநிவாச நாயக்கத் தேரரைச் சந்தித்து அவருடைய நலன் விசாரித்தறிந்தார்.

ஜய ஸ்ரீ போதியை வழிபடுவதற்காக வருகை தரும் யாத்திரிகர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் வாகனத் தரிப்பிடத்தின் நிர்மாணப்பணிகள் தொடர்பில், அட்டமஸ்தானாதிபதியுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

ஜய ஸ்ரீ மஹா போதிக்கு அருகில், மஹா சங்கத்தினரால் பிரித் பாராயணம் செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.

இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றவிருக்கும் பெருந்தொகையான மாணவர்கள், ஜய ஸ்ரீ மஹா போதியை வழிபாடு செய்ய வருகை தந்திருந்தனர். அவர்களின் அந்தப் பரீட்சை நடவடிக்கைகளுக்கு, ஜனாதிபதி ஆசிர்வாதமளித்தார்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபத்துக்கள்: பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

Leave a Reply