
“பெண்களே நம் தேசத்தின் கண்கள்” என்ற தொனிப்பொருளில், மகளிர் எழுச்சி மாநாடு தற்போது யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாக்கியுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூர் நாவலர் மண்டபத்தில் இந் நிகழ்வுகள் இடம்பெறுகின்றது.
நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான செ. கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

