
சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவை வேனில் ஏற்றிச் சென்ற நபர் ஒருவர், இன்று காலை பொத்துப்பிட்டிய பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாணந்துறையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த வேன், பொத்துப்பிட்டிய சந்திக்கு அருகில் காலி வீதியில் நிறுத்தப்பட்ட போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் இருந்து 63 கிலோ 200 கிராம் கேரளா கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியதுடன், வானையும் கைப்பற்றியுள்ளனர்.
கைதான சந்தேகநபரிடம் இருந்து 7 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்த கேரள கஞ்சா வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும், பாணந்துறை சலிது என்பவருக்கு சொந்தமானது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.