
பிரதமர் பதவியில் இருந்து மஹிந்தவை விலக்க குடும்பத்தினர் முயற்சிப்பதாக வெளியாகும் செய்தி தொடர்பில் பிரதமர் கருத்து வெளியிட்டார்.
2015 இல் நாங்கள் தோல்வியடைந்த போது சமல் பிரதமராக பதவியேற்பார் என்றும், எங்களை அரசியலில் இருந்து நீக்குவார் என்றும் வதந்தி பரவியது. கோட்டாவை நான் போட்டியிட அனுமதிக்க மாட்டேன் என்ற வதந்தி பரவியது.
சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் காலத்திலும் இவ்வாறான அச்சங்கள் இருந்தன. அவ்வாறு கூறப்படும் விடயங்களை கண்டுக்கொள்ள வேண்டாம்.
இந்த நாட்டில் அரசாங்கங்களை தோற்கடிக்கும் போது, ராஜபக்ச எதிர்ப்பைக் கொண்டு வருகின்றனர்.
அடுத்ததாக ஒரு அரசாங்கம் அமைக்கும் போது மஹிந்த அலை தேவை. வெற்றி தோல்வி இரண்டிற்கும் ராஜபக்ஷர்கள் தேவைப்படுவார்கள்.
இது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. அதனை பயன்படுத்தி நாணய சுழற்சி போடுகின்றார்கள்.
எனது அரசியலில் பிரதமர் பதவி இல்லை. இது அரசியலின் ஒரு சிறிய பகுதி. மஹிந்த ராஜபக்ச அரசியலை கைவிடுவார் என நினைக்கிறீர்களா?
இதுபோன்ற கதைகளை உருவாக்கும் நோயாளிகளுக்கு மத்தியில் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். நான் கூறுவது உங்களுக்குப் புரியும் – என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.