மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தில் கற்பதற்கான அரிய வாய்ப்பு!

மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தில் கற்பதற்கான அரிய வாய்ப்பு. உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தில் கற்பதற்கான அரிய வாய்ப்பு.
https://apply.sliate.ac.lk/

உயர் தரம் முடித்து விட்டு பல்கலைக்கழக வாய்ப்பின்றி உயர் கல்வி ஒன்றினை கற்க நினைப்பவரா நீங்கள்?

கல்வியாண்டு 2021 இற்காக உயர் தொழில்நுட்பவியல் நிறுவனங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2020ம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தியவடைந்தவரா நீங்கள்
மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் பின்வரும் பாடநெறிகளை நீங்கள் online இன்றே பதிவு செய்து கொள்ளலாம். 

கணக்கீடு உயர் தேசிய டிப்ளோமா (HNDA) காலம்: 4 ஆண்டுகள் (முழு நேரம் / பகுதி நேரம்)
ஆங்கில உயர் தேசிய டிப்ளோமா (HNDE)     காலம்: 2 1/2 ஆண்டுகள் (முழு நேரம் / பகுதி நேரம்)
தகவல் தொழில்நுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா (HNDIT) காலம்:  2 1/2  ஆண்டுகள் (முழு நேரம் / பகுதி நேரம்)

இதற்காக நீங்கள் கொண்டிருக்க வேண்டிய தகைமைகள் என்ன?            
HNDAகணக்கீடு உயர் தேசிய டிப்ளோமா (HNDA)கற்க வேண்டுமாயின் க.பொ.த (உ/த) பரீட்சையில் ஒரே அமர்வில் கணக்கீட்டு பாடத்தில் திறமைச் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் க.பொ.த (சா/த) பரீட்சையில் ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் சாதாரணச் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். 

(வணிகப் பிரிவு மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன் வெற்றிடங்கள் காணப்படின்   தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களுக்கு இரண்டாம் இடம் வழங்கப்படும்)
கணக்கீடு பற்றிய உயர் தேசிய டிப்ளோமாவினை பகுதி நேர அடிப்படையில் கற்க விரும்புகின்ற மாணவர்கள் மேற் குறிப்பிட்ட தகைமைகள் அல்லது கீழ் குறிப்பிடப்படும் தகைமைகளுடன் இருத்தல் வேண்டும்

கணக்கீட்டுத் துறையில் உயர் தேசிய டிப்ளோமா
கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர்களுக்கான தேசிய சான்றிதழ்
வணிகக் கல்வியில் தேசிய சான்றிதழ்
கணக்கீட்டில் தேசிய சான்றிதழ்
விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட துறையில் அரச நிறுவனம்/பொதுநிறுவனம்/அங்கீகரிப்பட்ட நிறுவனமொன்றின் பணியாளராக இருத்தல் வேண்டும் அல்லது சுயதொழில் செய்பவராக இருத்தல் வேண்டும். 

HNDEஆங்கில உயர் தேசிய டிப்ளோமா(HNDE)கற்க வேண்டுமாயின் க.பொ.த. (சா/த) பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் திறமைச் சித்தியடைந்திருத்தல் வேண்டும். அல்லது க.பொ.த. (சா/த) பரீட்சையில் ஆங்கில் இலக்கியப் பாடத்தில் சாதாரணச் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

ஆங்கில உயர் தேசிய டிப்ளோமா பாட நெறியினை பகுதி நேரமாக கற்க வேண்டுமாயின் அரச துறைஃ பொது நிறுவனம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் (EPF, ETF ஆகியன கொண்ட) அல்லது சுய தொழில் ஆகியவற்றில் பணியமர்த்தப்பட்டவராக இருத்தல் வேண்டும். நேர்காணலின் போது மேற்குறித்த சட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

HNDITதகவல் தொழில் நுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா(HNDIT) கற்க வேண்டுமாயின் கா.பொ.த (உ/த) பரீட்சையில் ஏதேனும் ஒரு பிரிவில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். அத்துடன் கா.பொ.த (சா/த) பரீட்சையில் ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் சாதாரண சித்தியினைப் பெற்றிருத்தல் வேண்டும்.

தகவல் தொழில் நுட்பக் உயர் தேசிய டிப்ளோமா கற்கையினை பகுதி நேரமாகக் கற்க வேண்டுமாயின் மேற்குறித்த தகைமைகளுடன் அரச துறை / பொது நிறுவனம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது சுய தொழில் ஆகியவற்றில் பணியமர்த்தப்பட்டவராக இருத்தல் வேண்டும்.

இப்பாட நெறிகளுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்?
https://apply.sliate.ac.lk/
எனும் இணையத்தளத்தினூடாக மட்டுமே மாணவர்கள் கற்கை நெறிக்கான பதிவுகளை மேற் கொள்ள முடியும். (முடிவுத் திகதி 2022.01.31)
விண்ணப்பதாரிகள் 500/- கட்டணத்தினை இலங்கையிலுள்ள மக்கள் வங்கிக் கிளையில் SLIATE கணக்கு 025-2-001-1-3397613 இற்கு 2022 ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர்  செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பம் உறுதிசெய்யப்பட்டதன் பிறகு, விண்ணப்பப்படிவத்தின் வன்பிரதியில் கையொப்பமிட்டு பணம் செலுத்தப்பட்டமைக்கான பற்றுச்சீட்டினை அதனுடன் இணைத்து உயர் தொழில்நுட்பவியல் நிறுவனம் மட்டக்களப்பிற்கு 2022 ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும். 

செ. ஜெயபாலன்,
பணிப்பாளர்,
உயர் தொழில்நுட்பவியல் நிறுவனம்,
மட்டக்களப்பு.
0778641182

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *