
சம்பந்தன் தலைமையில் இடம்பெறும்
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஆவணம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடத்தில் கையளிக்கப்படவுள்ளது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புனொட் தலைவர் த.சித்தார்த்தன் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா ஆகியோரும் ரெலோ ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன், கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோரும் பங்கேற்பார்கள் என்று நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த ஆவணம், டிசம்பர் மாதம் 29 ஆம் திகதியிடப்பட்ட இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலையில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கையொப்பமிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து ஏனைய தலைவர்களும் கையொப்பமிடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
