
பிரதான பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய என். டீ. என். குமாரி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளாா்.
அதற்கமைய, இவரே பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முதலாவது உதவி பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதற்கு மேலதிகமாக மேலும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 8 போ் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

